பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பை வெல்லும் வரை திருமணம் செய்யமாட்டேன்- வைரலான ரசிகையின் பதாகை


Image Courtesy : Twitter / @IPL
x
Image Courtesy : Twitter / @IPL
தினத்தந்தி 13 April 2022 1:11 PM GMT (Updated: 13 April 2022 1:11 PM GMT)

14 ஐபிஎல் சீசனில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.

மும்பை,

ஐ.பி.எல் 2022 தொடரின் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின.இந்த போட்டியில் பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இது சென்னை அணிக்கு முதல் வெற்றியாகும்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது மைதானத்தில் பெங்களூரு ரசிகை ஒருவர் கையில் வைத்திருந்த பதாகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ரசிகை வைத்திருந்த பதாகையில் "ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கோப்பை வெல்லும் வரை தான் திருமணம் செய்துகொள்ள போவதில்லை " என எழுதப்பட்டு இருந்தது.

இது வரை 14 ஐபிஎல் சீசனில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. இந்த நிலையில் தற்போது அந்த ரசிகை இவ்வாறு தெரிவித்திருப்பதை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

Next Story