நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி

முதல் முறையாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ - பபிள் முறையில் உள்ளனர்.
இந்த சீசனில் 24 போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக ஐபிஎல் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டெல்லி அணியின் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்" என்று ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அனைவரும் பயோ பபிளில் இருப்பதால் மற்ற வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி அணி தங்கள் அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.
Related Tags :
Next Story