தீபக் சஹாருக்கு ஏற்பட்ட அடுத்தடுத்து காயம் காரணமாக என்சிஏ பயிற்சியின் மீது பிசிசிஐ அதிருப்தி ?


Image Courtesy : Twitter / @IPL
x
Image Courtesy : Twitter / @IPL
தினத்தந்தி 15 April 2022 1:19 PM GMT (Updated: 15 April 2022 1:19 PM GMT)

சஹாகருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

பிசிசிஐ-யின் விதிமுறைகளின்படி காயம் ஏற்படும் சர்வதேச இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று ஓய்வு மற்றும் சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும்.

கடந்த ஆண்டு இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்காக சென்ற போது அங்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கிருந்து வெளியேறி தனது சொந்த செலவில் வெளியில் பயிற்சி பெற்று வந்தார். 

பின்னர் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றால் என்சிஏ-வுக்கு திரும்ப வேண்டும் என்றும், அங்கு உடற்தகுதியை நிரூபித்தால் தான் அனுமதி தரப்படும் என பிசிசிஐ தெரிவித்ததது.

தற்போது காலில் காயம் என சென்ற தீபக் சஹாருக்கு திடீரென முதுகில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் உடன் சேர்த்து டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கடந்த வருடம் பாண்டியா என்சிஏ-மீது அதிருப்தி தெரிவித்தது போல தற்போது பிசிசிஐ-யும் தீபக் சஹாகருக்கு ஏற்பட்ட அடுத்தடுத்து காயம் காரணமாக அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய பிசிசிஐ- குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் "ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு வரும்போது இரண்டாம் நிலை காயம் எப்படி ஏற்படும்  என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பல முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் அடுத்தடுத்து வரவிருக்கிறது. 

இந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து வீரர்களை இழக்க முடியாது. இந்த குழப்பத்தை என்சிஏ விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் " என தெரிவித்துள்ளார்.

Next Story