"பெங்களூரு அணி நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்" - அடித்து சொல்லும் ரவி சாஸ்திரி

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளது.
மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில் ராஜஸ்தான் , லக்னோ , பெங்களூரு ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லப்போகும் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்," இந்த சீசனில் ஒரு புதிய சாம்பியனைப் நாம் பார்ப்போம் என்று நம்புகிறேன். குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
இதனால் அவர்கள் நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்வார்கள். போட்டிகள் முன்னேற முன்னேற பெங்களூரு அணி வீரர்கள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் " என தெரிவித்தார்.
இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story