"உலகின் சிறந்த விருந்தோம்பல் இந்தியாவில் தான் " -ஐபிஎல் வர்ணனைக்கு திரும்பிய கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி
இந்தியாவில் தான் உலகில் சிறந்த விருந்தோம்பலை அனுபவிக்கலாம் என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன். இவர் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுள் இவரும் ஒருவர்.
ஐபிஎல் தொடர் தொடங்கி 3-வாரங்கள் ஆன நிலையில் கெவின் பீட்டர்சன் தற்போது தான் இந்த தொடரில் வர்ணனையாளராக செய்லபட நேற்று புறப்பட்டுள்ளார்.
புறப்படுவதற்கு முன்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், " ஐபிஎல் வர்ணனைக்காக வந்து கொண்டிருக்கிறேன், இதனால் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். உலகில் சிறந்த விருந்தோம்பலை அனுபவிப்பது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story