ஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 19 April 2022 1:34 PM GMT (Updated: 19 April 2022 1:34 PM GMT)

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. 25-வது நாளான இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3- வது இடத்திலும், பெங்களூரூ 4-வது இடத்திலும் உள்ளன.இதனால் 5- வது வெற்றியை பெறப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரூ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Next Story