"சுரேஷ் ரெய்னா என் வாழ்க்கையில் ஒரு கடவுளாக வந்தார்" - ஐதராபாத் அணியின் இளம் வீரர் நெகிழ்ச்சி


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 21 April 2022 11:07 AM GMT (Updated: 21 April 2022 11:07 AM GMT)

சுரேஷ் ரெய்னா குறித்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வீரர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்ட இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி . 20 லட்சம் அடிப்படை தொகையில் ஏலத்தில் இடம் பெற்று இருந்த இவரை ரூ . 4 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியது.

2020 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் கலக்கிய இவர் அதன்பின் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். அந்த ஆண்டின் இறுதியில்  இந்திய அணியுடன் நெட் பவுலராக ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்தார். மின்னல் வேகத்தில் பந்துவீசும் இவர் கார்த்திக் தேர்வாளர்களின் கவனத்தையும் பெற்றிருக்கலாம்.

இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடுகிறார். கார்த்திக் தியாகி ஓய்வு பெறுவதற்கு முன்பு  உத்தரபிரதேச மாநில அணியை வழிநடத்திய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா குறித்து கார்த்திக் கூறுகையில், "

நான் முதலில் 14 வயதுக்குட்பட்ட அணிக்காகவும், பின்னர் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாட ஆரம்பித்தேன். ஒருமுறை 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன். 

நிறைய விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தோம், ஆனால் தோற்றோம். அங்குதான் ஞானேந்திர பாண்டே சார் என்னைப் பார்த்தார். பின்னர் நான் ரஞ்சி போட்டிக்கு தேர்வானேன்.

அப்போது பயிற்சியின் போது எனது பந்துவீச்சை கவனித்த ரெய்னா , அவருக்கு அது மிகவும் பிடித்ததாக கூறினார். மேலும் எதிர்காலத்தில் எனக்கு  வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார். 

ரெய்னா எனது வாழ்க்கையில் ஒரு கடவுளாக வந்தார். அவரது தலைமையின் கீழ் நான் ரஞ்சி டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்கினர். அது எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும்." என அவர் தெரிவித்தார்.

Next Story