ஐபிஎல்- மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை,
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன .
ஐபிஎல் தொடர்களில் ஜாம்பவான் அணிகளாக வலம் வந்த இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகின்றன. 6 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை 1 வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.
இந்த நிலையில் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
Related Tags :
Next Story