ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை "டக்" அவுட் - ரோகித் சர்மா மோசமான சாதனை..!!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 21 April 2022 4:09 PM GMT (Updated: 21 April 2022 4:09 PM GMT)

சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும்  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இது ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மாவின் 14-வது டக் அவுட்டாகும். இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக பியூஸ் சாவ்லா 13 முறை டக் அவுட்டாகி உள்ளார் 

Next Story