ஐபிஎல்- ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 22 April 2022 7:06 PM IST (Updated: 22 April 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன .

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி  அணி இந்த  தொடரில் விளையாடிய 6 போட்டியில் 3 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது . சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்  அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் , 4ல் வெற்றி   பெற்று புள்ளி பட்டியலில் 3 வது  இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Next Story