"மான்கட்" முறையில் ஆட்டமிழந்த ஸ்மிரிதி மந்தனா.. பந்துவீச்சாளருடன் வாக்குவாதம்..!- வைரல் வீடியோ


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 24 April 2022 4:35 PM GMT (Updated: 24 April 2022 4:35 PM GMT)

ஸ்மிரிதி மந்தனா 28 ரன்களில் இருந்த போது "மான்கட்" முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

மும்பை,

பெண்களுக்கான சீனியர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராஜஸ்தான் - மகாராஷ்டிரா அணிகள் சம்பத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா - ஷிண்டே ஜோடி விளையாடி வந்தனர். 

ஸ்மிரிதி மந்தனா 28 ரன்களில் இருந்தபோது நாண்- ஸ்ட்ரைக்கர் பக்கம் நின்று கொண்டு இருந்தார். அப்போது பந்துவீச வந்த ராஜஸ்தான் வீராங்கனை மந்தனா நிர்ணயிக்கப்பட்ட கோட்டுக்கு வெளியே நிற்பதை உணர்ந்து அவரை மான்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.

இதனால் மந்தனா பந்துவீச்சாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களும் மந்தனாவுடன் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்லேட்யிங்கில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நடுவர்கள் மந்தனாவுடன் பேசிய பின்னர் அவர் களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story