பொல்லார்ட்-க்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய குருனால் பாண்டியா- வைரல் வீடியோ


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 25 April 2022 9:46 AM GMT (Updated: 25 April 2022 9:46 AM GMT)

மும்பை ரசிகர்கள் பாண்டியாவிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் நேற்று  நடைபெற்ற  37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதின.

முதல் வெற்றியை தேடி சொந்த மைதானத்தில் களம் கண்ட மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது. நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத மும்பை அணி நேற்று 8-வது தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் 19 ரன்களில் மும்பை அணியின் முன்னாள் வீரர் குருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அப்போது பொல்லார்ட் பெவிலியன் நோக்கி நடையைக்கட்ட, அவர் அருகில் சென்ற குருனால் பாண்டியா துள்ளிக்குதித்து பொல்லார்ட் தலையில் முத்தம் கொடுத்தார்.

ஆட்டமிழந்த விரக்தியில் சென்ற பொல்லார்ட், குருனால் பாண்டியா-விடம் பதிலுக்கு எதுவும் தெரிவிக்காமல் நடையை கட்டினார்.

இந்த நிலையில் தற்போது மும்பை அணியின் ரசிகர்கள் குருனால் பாண்டியாவிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நண்பர்களாக இருந்தாலும் பொல்லார்ட் ஆட்டமிழந்த போது அவரிடமே சென்று கொண்டாட்டத்தில் முத்தம் கொடுத்த பாண்டியாவிற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story