பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு யார் காரணம் ?- ரவீந்திர ஜடேஜா விளக்கம்


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 26 April 2022 11:34 AM GMT (Updated: 26 April 2022 11:34 AM GMT)

சென்னை அணியின் தோல்வி குறித்து அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் தொங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி பெரும் 2-வது தோல்வி இதுவாகும். மேலும் ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் சென்னை அணியின் 6-வது தோல்வி இது. 

இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறுகையில், "நாங்கள் நன்றாகத்தான் பந்துவீசித் தொடங்கினோம். புதிய பந்தில் லைன் லென்த்தில் நன்றாக எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ஆனால், கடைசி 2 முதல் 3 ஓவர்களில் கூடுதலாக 15 ரன்கள் வழங்கிவிட்டோம். எங்கள் திட்டப்படி எதுவுமே நடக்கவில்லை. பந்துவீச்சும் சரியில்லை.

ராயுடுவின் பேட்டிங் அருமையாக இருந்தது. 170 முதல் 175 ரன்களுக்குள் பஞ்சாப் அணியை சுருட்டியிருக்க வேண்டும். நாங்கள் சேஸிங் செய்யும்போது, முதல் 6 ஓவருக்குள் நல்ல ஸ்கோர் எடுத்திருக்க வேண்டும்,

அதுவும் நடக்கவில்லை, நல்ல ஸ்கோரும் அமையாததால், பின்னால் களமிறங்கும் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இன்னும் நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொண்டு வலுவாக அடுத்த போட்டியில் வருவோம்” எனத் தெரிவித்தார்.

Next Story