"இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது"- டேல் ஸ்டெயின்


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஐதராபாத் வீரர் குறித்து டேல் ஸ்டெயின் பேசியுள்ளார்.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் ராகுல் திரிபாதி.

பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை  8.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணிக்கு சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி வெற்றிகளை தேடித்தந்துள்ளார்.

பல வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இவர் சிறந்த சராசரி உடன் பேட்டிங் செய்து வருகிறார். இருப்பினும் அவர் இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை.

இது குறித்து பேசிய ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டேல் ஸ்டெயின் கூறுகையில், " இந்திய அணியில் இடம் பெற ராகுலுக்கு தற்போது அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். ஐபிஎல் என்பது வீரர்களை மிகவும் சிறப்பாக செயல்பட அனுமதிக்கும் ஒரு தளமாகும். 

அதில் இருந்து இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்படி இருக்க  ராகுல் திரிபாக்கு இந்திய அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது " என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story