ஐபிஎல் 2022 : பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டி நடைபெறவுள்ள மைதானங்கள் அறிவிப்பு..!!


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 3 May 2022 6:27 PM IST (Updated: 3 May 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டி நடைபெறவுள்ள மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மராட்டிய மாநில மைதானங்களில் மட்டுமே நடைபெறும் இந்த போட்டிகளுக்கு 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  ஐபிஎல் போட்டிகளின் பிளே- ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டி நடைபெறவுள்ள மைதானங்களை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார்.

அதில் ஐபிஎல் 2022 சீசனின் பிளேஆஃப் சுற்று ஆட்டங்கள்  அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் தகுதி சுற்று  மே 24 அன்றும்,  எலிமினேட்டர் சுற்று போட்டி மே 25 ஆம் தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2-வது தகுதிச்சுற்று  (மே 27 ) மற்றும் இறுதி போட்டி (மே 27 ) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 More update

Next Story