"பொல்லார்ட் குஜராத் அணிக்கு வரவேண்டும்" - விருப்பம் தெரிவித்த ஹர்திக் பாண்டியா ..!!


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 6 May 2022 9:55 AM GMT (Updated: 6 May 2022 9:55 AM GMT)

பொல்லார்ட் குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது.  மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள  51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். குஜராத் அணியை வெற்றிகரமாக  ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக பாண்டியா உருவெடுத்ததிற்கு மும்பை அணி முக்கிய காரணமாகும்.

கடத்த சீசன் வரை மும்பை அணியில் இருந்த பாண்டியா தற்போது மும்பை அணியை எதிர்த்து கேப்டனாக களமிறங்குகிறார் . இந்த நிலையில் இன்றைய போட்டி குறித்து அவர் பேசுகையில், ""நான் எப்போதும் என்னை நீல நிற ஜெர்ஸியில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் எனது சொந்த மாநிலத்துக்காக நீல நிற ஜெர்சியில் களமிறங்குவது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மும்பை அணிக்காக விளையாடியது குறித்த பல நல்ல நினைவுகள் உள்ளன " என அவர் தெரிவித்தார்.

பின்னர் பொல்லார்ட் குறித்து பேசிய அவர், "நான் சில நாட்களுக்கு முன்பு பொல்லார்ட்க்கு மெசேஜ் செய்தேன். அப்போது அவர் அடுத்த வருடம் எங்கள் அணிக்கு வரவேண்டும் . இது என் விருப்பம் என தெரிவித்தேன். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்று எனக்குத் தெரியும்" என பாண்டியா கூறியுள்ளார்.

Next Story