ஆரணியில் நடந்த சம்பவத்தில் திருப்பம் சிறுவனை கடத்தி கிணற்றில் வீசி கொலை செய்த கல்லூரி மாணவன் கைது பரபரப்பு வாக்குமூலம்


ஆரணியில் நடந்த சம்பவத்தில் திருப்பம் சிறுவனை கடத்தி கிணற்றில் வீசி கொலை செய்த கல்லூரி மாணவன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 31 Dec 2016 10:30 PM GMT (Updated: 31 Dec 2016 1:03 PM GMT)

கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு தொல்லைப்படுத்தியதால் அவரது உறவினரான வங்கி அலுவலரின் மகனை மகனை கடத்தி கிணற்றில் கல்லைக்கட்டி வீசி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மாணவன் மாயம் ஆரணி கொசப்பாளை

ஆரணி,

கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு தொல்லைப்படுத்தியதால் அவரது உறவினரான வங்கி அலுவலரின் மகனை மகனை கடத்தி கிணற்றில் கல்லைக்கட்டி வீசி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மாணவன் மாயம்

ஆரணி கொசப்பாளையம் காண்ட்ராக்டர் பொன்னுச்சாமி தெருவை சேர்ந்தவர் தாமோதரன். வங்கி அலுவலர். இவரது மகன் யுவராஜ் (வயது 13) பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 8–ந் தேதி தாத்தா வீட்டிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற யுவராஜ் அதன்பின் வீடு திரும்பவில்லை.

2 நாட்கள் கழித்து ஆரணி–வந்தவாசி சாலையில் உள்ள விவசாயி கிணற்றில் யுவராஜ் வயிற்று பகுதியில் கல்லை கட்டி கொண்ட நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஆரணி தாலுகா போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். யுவராஜ் வயிற்றுப்பகுதியில் கல்லைக்கட்டிய நிலையில் இறந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதி அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மேல்விசாரணை நடத்தி வந்தார்.

கடத்தல்

இதனிடையே அதே பகுதியில் பல இடங்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் உள்ள காட்சிகளை இறந்த யுவராஜின் தந்தை தாமோதரனின் உறவினரான சுகுமார் (45) என்பவர் பார்த்தபோது யுவராஜை அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து தாலுகா போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து யுவராஜை மோட்டார்சைக்கிளில் அழைத்துச்சென்ற 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவரிடம் வாலிவிசாரித்தபோது அவர் சிறுவன் யுவராஜை கடத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் பரபரப்பான தகவல் கிடைத்தது. அப்போது கல்லூரி மாணவர் போலீசாரிடம் கூறியதாவது:–

நான் செய்யாறு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும்போதே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து ஆன்லைன் மூலம் செல்போன்களை பெற்று வியாபாரம் செய்து வந்தேன். கடந்த சில மாதங்களாக பணம் கொடுத்தும் விசாகப்பட்டினத்திலிருந்து செல்போன் வினியோகிக்கப்படவில்லை. இதில் எனக்கு ரூ.7 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

நான் வங்கி அலுவலர் தாமோதரனின் உறவினரான துளசிராமனிடம் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றிருந்தேன். அந்த பணத்தை திரும்பக்கேட்டு துளசிராமன் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். எனவே தாமோதரனின் மகனை கடத்தி பணம் கேட்டால் பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் யுவராஜை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றேன். அவனை கடத்தியது குறித்து பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தேன். அவர்கள் ‘‘நீ கேட்கும் பணத்தை தந்து விடுகிறோம், ஆனால் உன்னை உயிரோடு விடமாட்டோம்’’ என்று மிரட்டினர். இதனால் நான் என்ன செய்வது என்று புரியாமல் யுவராஜை வயிற்று பகுதியில் கல்லை கட்டி கிணற்றில் போட்டுவிட்டேன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா கொலை வழக்காக மாற்றம் செய்து கல்லூரி மாணவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story