அருப்புக்கோட்டை அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை–பணம் திருட்டு


அருப்புக்கோட்டை அருகே  வீட்டுக் கதவை உடைத்து நகை–பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 Jan 2017 3:45 AM IST (Updated: 31 Dec 2016 6:41 PM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஏஞ்சலா(வயது 37) மகனுடன் இங்கு வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஏஞ்சலா வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நேர

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஏஞ்சலா(வயது 37) மகனுடன் இங்கு வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஏஞ்சலா வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் மர்ம நபர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3½ பவுன் நகை மற்றும் 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டான். மறுநாள் வீடு திரும்பிய ஏஞ்சலா இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்து பந்தல்குடி போலீசில் புகார் செய்தார். பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story