அடுத்தடுத்த 2 வீடுகளின் கதவை உடைத்து 17 பவுன் நகை– 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவாரூர் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளின் பின்பக்க கதவை உடைத்து 17 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருட்டு திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.
திருவாரூர்
திருவாரூர் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளின் பின்பக்க கதவை உடைத்து 17 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருட்டுதிருவாரூர் அருகே உள்ள வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சதீஷ்குமார். இவர்கள் இருவரும் சவூதிஅரேபியா நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். வீட்டில் சீனிவாசனின் மனைவி சுசீலா தனியாக வசித்து வந்துள்ளார். பாதுகாப்பு கருதி சுசீலா இரவு நேரங்களில் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்க செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று இரவு உறவினர் வீட்டில் சுசீலா தங்கினார்.நேற்று காலை வழக்கம்போல் சுசீலா வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டுப்போய் இருந்தது தெரியவந்தது.
வழக்குப்பதிவுஇது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருட்டு நடந்த வீட்டின் அருகில் உள்ள வீராசாமி என்பவரது வீட்டின் பின்பக்க கதவையும் மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த 2 வீடுகளில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.