நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி 15 பேர் படுகாயம் வெளிநாடு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது நடந்தது


நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி 15 பேர் படுகாயம் வெளிநாடு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது நடந்தது
x
தினத்தந்தி 31 Dec 2016 11:30 PM GMT (Updated: 31 Dec 2016 2:39 PM GMT)

வெளிநாடு சென்று விட்டு திரும்பியவர்கள் வேன் கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். வெளிநாட்டில் சுற்றுப்பயணம் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மருதமணி (வயது 46). இவர் மற்றும் உறவினவர்கள் 17 பேர் சிங்கப்பூர், மலேச

ஆம்பூர்,

வெளிநாடு சென்று விட்டு திரும்பியவர்கள் வேன் கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெளிநாட்டில் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மருதமணி (வயது 46). இவர் மற்றும் உறவினவர்கள் 17 பேர் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அங்கிருந்து அனைவரும் கிருஷ்ணகிரிக்கு ஒரு வேனில் வந்தனர். வேனை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார்.

ஆம்பூர் அருகே கீழ்முருங்கை பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.

நொறுங்கியது

இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் இருந்த மருதமணி, முருகேசன், கந்தசாமி, பழனி, மனோராஜ், கலையரசி, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story