சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 1 Jan 2017 4:45 AM IST (Updated: 31 Dec 2016 8:27 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நாளை(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார். நாளை கொடியேற்றம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உ

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நாளை(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாளை கொடியேற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த 2 திருவிழாக்களின்போதும் மூலவரே சன்னதியில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார் என்பது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கு கிறது. இதையொட்டி நாளை அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தொடர்ந்து காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

10–ந் தேதி தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் 10–ந் தேதியும், ஆருத்ரா தரிசனம் 11–ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த விழாவின்போது நகரில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேற்று காலையில் தேரோடும் 4 வீதிகள், ஆருத்ரா தரிசனம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் மோகன், கோவிந்தசாமி, அண்ணாமலைநகர் ரமேஷ்ராஜ், புதுச்சத்திரம் ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், நடராஜன் மற்றும் போலீசாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.


Next Story