திருச்செந்தூரில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 32 மின் மோட்டார்கள் பறிமுதல்


திருச்செந்தூரில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 32 மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Dec 2016 7:30 PM GMT (Updated: 2016-12-31T21:11:51+05:30)

திருச்செந்தூரில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 32 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 32 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

திடீர் ஆய்வு

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்தில் உள்ள வீடுகள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளில் சிலர் முறைகேடாக மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வந்தனர். இதனால் தெருக்குழாய்களில் சீராக குடிநீர் கிடைக்க பெறாமல், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் சுப்பாராஜ் தலைமையில், சுகாதார அலுவலர் பூவையா உள்ளிட்ட குழுவினர் நேற்று திருச்செந்தூர் ஜீவாநகர், கீழ வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, சன்னதி தெரு, வ.உ.சி. தெரு, புளியடி அம்மன் கோவில் தெரு, வீரராகவபுரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள், மடங்கள், வணிக நிறுவனங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

32 மின் மோட்டார்கள் பறிமுதல்

அப்போது குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக தண்ணீரை உறிஞ்சிய 32 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முறைகேடாக பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளையும் துண்டித்தனர்.

மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்ட குடிநீர் இணைப்புகளில் மீண்டும் முறைகேடாக தண்ணீரை உறிஞ்சினால், நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story