வட்டிக்கு பணம் கொடுத்து வீட்டை எழுதி வாங்கி தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியவர் குண்டர் சட்டத்தில் கைது கஞ்சா விற்ற 4 பேரும் சிக்கினர்
திண்டுக்கல், வட்டிக்கு பணம் கொடுத்து வீட்டை எழுதி வாங்கி தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியவர் மற்றும் கஞ்சா விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வட்டி பணம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தம்மணம்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி சவுந்தரபாண்
திண்டுக்கல்,
வட்டிக்கு பணம் கொடுத்து வீட்டை எழுதி வாங்கி தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியவர் மற்றும் கஞ்சா விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வட்டி பணம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தம்மணம்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி சவுந்தரபாண்டியன். இவர் வேடசந்தூர் இந்திராநகரை சேர்ந்த முத்துராஜா என்ற புல்லட்ராஜா (வயது 36) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். இதற்கு முத்துராஜா அதிக வட்டி கேட்டதோடு, பணத்திற்காக அவருடைய வீட்டை எழுதி வாங்கி கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சவுந்தரபாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து சவுந்தரபாண்டியனை தற்கொலைக்கு தூண்டியதாக, வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தார். இதற்கிடையே முத்துராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவின்பேரில் முத்துராஜா என்ற புல்லட்ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கஞ்சா விற்ற 4 பேர்
அதேபோல் கொடைக்கானல் செல்வபுரத்தை சேர்ந்த வினோத்சிவகுரு (24), லாயிட்ஸ் சாலை பகுதியை சேர்ந்த காமாட்சி மகன் ராஜா (29), பெரும்பள்ளம் குருசடிமெட்டு மணிகண்டன் (30), நாயுடுபுரத்தை சேர்ந்த சந்திரபோஸ் மகன் ராஜா (34) ஆகியோர் கொடைக்கானல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக, கொடைக்கானல் போலீசாரால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவின்பேரில், 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கொடைக்கானல் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story