வெடிமருந்து தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். இந்நிலையில் தளுகை முருகன் கோவிலில் நேற்று காலை டி.முருங்கப்பட்டி, தளுகை, பாதர்பேட்டை, த.மங்கப்பட்டி, வெ
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். இந்நிலையில் தளுகை முருகன் கோவிலில் நேற்று காலை டி.முருங்கப்பட்டி, தளுகை, பாதர்பேட்டை, த.மங்கப்பட்டி, வெள்ளாளப்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்தவர்கள், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தளுகை முருகன் கோவிலில் ஒன்று கூடினார்கள். அங்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் சுமார் 300 பேர் ஒன்று கூடி அங்கிருந்து டி.முருங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு வந்தனர். அங்கு வெடி விபத்தில் பலியான 19 தொழிலாளர்களின் பதாகைகள் வைக்கப்பட்டு, அதன்முன் மக்கள் அமர்ந்தனர். பின்னர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி, இறந்த தொழிலாளர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனையும், அஞ்சலியும் செலுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.