ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் அழிவின் விளிம்பில் தமிழ் கல்வெட்டுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் அழிவின் விளிம்பில் தமிழ் கல்வெட்டுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 Jan 2017 11:00 PM GMT (Updated: 3 Jan 2017 1:29 PM GMT)

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் அழிவின் விளிம்பிள் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க மரகதாம்

ஓசூர்,

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் அழிவின் விளிம்பிள் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சந்திரசூடேஸ்வரர் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் 12–ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டுகள் உள்ளன. தற்போது இந்த கல்வெட்டுகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

ஓசூர் சந்திரசூடேஸ்வர சாமி கோவிலில் மொத்தம் 26 தமிழ் கல்வெட்டுகளை, தொல்லியல் துறை, 1974–ம் ஆண்டு பதிவு செய்துள்ளது. இந்த கோவில், சோழர் காலத்தில் இருந்துதான் முழுமையான வழிபாட்டுக்கு வந்துள்ளது. ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், ஒய்சாள அரசர்களான வீரவிஸ்வநாதன், வீரநரசிம்மன், வீரராமநாதன் போன்ற அரசர்கள் கோவிலுக்கு வழங்கிய நிலதானங்கள் பற்றியும், கொடைகள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள் குறித்தும் இந்த கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாக்க வேண்டும்

கோவிலின் படிக்கட்டுகள் வழியே செல்லும் முன்பு காணப்படும் அனுமார் கோவிலின் முன்புறத்தில் உள்ள பாறையில் பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டு எழுத்துக்கள் பாதிக்கு மேல் சிதைவுற்று காணப்படுகிறது.

இவ்வாறாக, கோவிலின் பல்வேறு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ளதால், மீதமுள்ளவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், ஓசூர் சந்திர சூடேஸ்வர சாமி கோவிலை மாவட்ட நிர்வாகம் சுற்றுலாதலமாக அறிவித்து, வரலாற்றையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வரலாற்று தேடல் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story