ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம்


ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
x
தினத்தந்தி 7 Jan 2017 11:00 PM GMT (Updated: 7 Jan 2017 4:51 PM GMT)

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில்.

சிதம்பரம்,

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நடராஜர் கோவில்

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, ஆனி ஆகிய மாதங்களில் நடைபெறும் தரிசனத்தின் போது, மூலவராகிய நடராஜமூர்த்தி உற்சவராக புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதன்காரணமாக தரிசனத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில், இந்தாண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 2–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

தெருவடைச்சான் உற்சவம்

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெருவடைச்சான் உற்சவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

பின்னர், இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நள்ளிரவு முதல் விடியவிடிய நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

விழாவில் நாளைமறுநாள் (10–ந் தேதி) தேரோட்டமும், 11–ந் தேதி நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். பின்னர், 12–ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலாவும், 13–ந் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.


Next Story