சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி தாய்–மகள் பலி


சாத்தூர் அருகே  ஆற்றில் மூழ்கி தாய்–மகள் பலி
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-07T22:57:55+05:30)

சாத்தூர் அருகே பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளியான இவரது மனைவி சரஸ்வதி(வயது 36). இவர்களது மகள் மாரிச்செல்வி(6). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1–ம் வகுப்பு படித்து வந்தார். சரஸ்வதியும், மாரிச்செல்வியும் அங்குள்ள வைப்பாற்று பகுதியி

சாத்தூர்,

சாத்தூர் அருகே பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளியான இவரது மனைவி சரஸ்வதி(வயது 36). இவர்களது மகள் மாரிச்செல்வி(6). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1–ம் வகுப்பு படித்து வந்தார். சரஸ்வதியும், மாரிச்செல்வியும் அங்குள்ள வைப்பாற்று பகுதியில் குளிக்க சென்றனர். துணிகளை துவைத்து விட்டு ஆற்றின் உள்ளே குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். ஆற்றில் குளிக்க சென்ற தாயும், மகளும் வீட்டிற்கு வராததால் சண்முகம் ஆற்றுப்பகுதிக்கு வந்து இருவரையும் தேடினார். சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினரும் ஆற்றில் தேடிய போது சில மணி நேரம் கழித்து இருவரும் பிணமாக மிதந்தனர். இதுகுறித்து இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story