வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருப்பதாக மனைவி போலீசில் புகார்: விசாரணைக்கு பயந்த ஆட்டோ டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி திண்டிவனம் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு


வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருப்பதாக மனைவி போலீசில் புகார்: விசாரணைக்கு பயந்த ஆட்டோ டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி திண்டிவனம் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 7 Jan 2017 5:38 PM GMT)

வேறு பெண்ணுடம் தொடர்பு வைத்து இருப்பதாக கூறி ஆட்டோ டிரைவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். இதில் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்த போது, பயந்து போன அவர் திண்டிவனம் போலீஸ் நிலையம் முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த பரபரப்பு சம்ப

திண்டிவனம்,

வேறு பெண்ணுடம் தொடர்பு வைத்து இருப்பதாக கூறி ஆட்டோ டிரைவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். இதில் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்த போது, பயந்து போன அவர் திண்டிவனம் போலீஸ் நிலையம் முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ஆட்டோ டிரைவர்

திண்டிவனம் அருகே சீதாபுரத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 38) ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் சங்கரன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருப்பதாக தெரிகிறது. இதையறிந்த வள்ளி சங்கரனிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் வள்ளியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சங்கரன் மிரட்டியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் வள்ளி திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சங்கரன் வேறு ஒரு பெண்னுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதுபற்றி கேட்ட என்னை அவர் துன்புறுத்தி வருவதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்துவதற்காக சங்கரனை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளனர்.

வி‌ஷம் குடித்தார்

இதையடுத்து சங்கரன் நேற்று மதியம் திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தார். பின்னர் அவர் திடீரென போலீஸ் விசாரணைக்கு பயந்து தான் கொண்டு வந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சங்கரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story