பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் கலெக்டர் பிரபாகர் தகவல்


பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-08T01:45:10+05:30)

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, வெங்காயம், வாழை, மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செலுத்த நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். எனவே இந்த பயிர்களுக்கான தவணை தொகையை விவசாய

ஈரோடு,

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, வெங்காயம், வாழை, மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செலுத்த நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். எனவே இந்த பயிர்களுக்கான தவணை தொகையை விவசாயிகள் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்த வேண்டும்.

ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.390, நிலக்கடலைக்கு ரூ.338, எள்ளுக்கு ரூ.158, கரும்புக்கு 1,392, பருத்திக்கு ரூ.1,050, வெங்காயத்திற்கு ரூ.1,600, வாழைக்கு ரூ.3 ஆயிரத்து 450, மரவள்ளிக்கிழங்கிற்கு ரூ.1,450 தவணைத்தொகையாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள தகவல் மையங்களுக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.


Next Story