பெண்கள், குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்


பெண்கள், குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:30 PM GMT (Updated: 7 Jan 2017 8:37 PM GMT)

பெண்கள், குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்

திருச்சி,

திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் நேற்று பெண்கள், குழந்தைகளுக்கான உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.குமரகுரு தலைமை தாங்கி பேசினார். அப்போது பெண்கள், குழந்தைகளுக்கு சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை விளக்கி, அவர்கள் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக்கூறினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மக்கள் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதி சுப்பிரமணியன், டாக்டர் வெண்முகில், திருச்சி வக்கீல் சங்க தலைவர் சீனிவாசன், பெண் வக்கீல் சங்க தலைவி பத்மாராமநாதன், ஸ்ரீவித்யா ஆகியோர் பேசினார்கள். தொடக்கத்தில் சார்பு நீதிபதி கீதா வரவேற்றார். முடிவில் சட்டப்பணிகள் ஆணைய அதிகாரி தனபால் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story