கரூர் ரெங்கநாதசாமிக்கு மோகினி அலங்காரம் இன்று சொர்க்க வாசல் திறப்பு

கரூர் ரெங்கநாதசாமிக்கு மோகினி அலங்காரம் இன்று சொர்க்க வாசல் திறப்பு
x
தினத்தந்தி 7 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-08T02:07:36+05:30)

கரூர் ரெங்கநாதசாமிக்கு மோகினி அலங்காரம் இன்று சொர்க்க வாசல் திறப்பு

கரூர்,

கரூர் ரெங்கநாதசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 29-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பகல் பத்தின் இறுதி நாளான நேற்று சாமிக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இராப்பத்து நிகழ்ச்சி தொடங்குகிறது. இதேபோன்று கரூர் பண்டரிநாதன் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Next Story