“கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்


“கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-08T02:08:41+05:30)

“கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை,

“கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய புதுக்கோட்டை மாவட்ட பிரிவு சார்பில் கேலோ இந்தியா எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக அணி கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் தேர்வு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டிகளை கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தடகளம், டேக்வாண்டோ, கைப்பந்து, பளு தூக்குதல், இறகு பந்து, குத்துச்சண்டை, மேசை பந்து, கபடி, டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 925 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) போட்டிகள் நடக்கின்றன. இதில் மிதிவண்டி, கோ-கோ, கால்பந்து, ஜூடோ, வில்வித்தை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சிறப்பாக விளையாடும் 2 வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகள் ஒவ்வொரு வயது பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணியினர் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கலெக்டர் கணேஷ் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறையின் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நீச்சல் குளம் சீரமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story