விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.400 சம்பளத்துடன் ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் உயர்மட்ட குழுவினரிடம் கோரிக்கை


விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.400 சம்பளத்துடன் ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் உயர்மட்ட குழுவினரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2017 4:15 AM IST (Updated: 8 Jan 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.400 சம்பளத்துடன் ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் உயர்மட்ட குழுவினரிடம் கோரிக்கை

பட்டுக்கோட்டை,


நாள் ஒன்றுக்கு ரூ.400 சம்பளத்துடன் ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்று, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள் உயர் மட்ட குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வறட்சி பாதிப்பு


தஞ்சை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர். இந்த குழுவினர் பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள சொக்கனாவூர், தாமரங்கோட்டை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது தஞ்சை மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சி.பக்கிரிசாமி, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

ரூ.400


தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். விவசாய தொழிலாளர்க்கு ஆண்டு முழுவதும் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வேலை வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 சம்பளம் வழங்க வேண்டும். மேலும் 2015–2016–ம் ஆண்டுக்கான தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்ட இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கான அமைக்கப்பட்ட நடுவர் மன்ற குழுக்களை கலைத்துவிட்டு தேசிய நதிநீர் தீர்ப்பாயம் என்ற ஒரே அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story