கடல்நீர் உட்புகாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக தடுப்பணை பாரதி எம்.எல்.ஏ. தகவல்


கடல்நீர் உட்புகாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக தடுப்பணை பாரதி எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 7 Jan 2017 8:40 PM GMT)

கடல்நீர் உட்புகாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக தடுப்பணை பாரதி எம்.எல்.ஏ. தகவல்

கொள்ளிடம்,

கடல்நீர் உட்புகாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக தடுப்பணை கட்டப்படும் என்று பாரதி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. ஆய்வு

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகாத வகையில் தற்காலிக தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறையினர் இடம் தேர்வு செய்தனர். இந்த இடத்தை பாரதி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள விவசாயிகளும், பொதுமக்களும் நிலத்தடிநீர் உப்புநீராக மாறிவிட்டது. இதனால் குடிநீர் கிடைக்கவில்லை. மேலும், நிலத்தடிநீர் உப்புநீராக மாறியதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

தற்காலிக தடுப்பணை

அப்போது எம்.எல்.ஏ. கூறுகையில், கடல்நீர் உட்புகாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகை-குண்டலவாடி இடையே நிரந்தரமாக தடுப்பணை கட்டும் வரை, இன்னும் சில நாட்களில் தற்காலிக தடுப்பணை கட்டப்படும். இந்த தடுப்பணை பாலித்தீன் பைகளால் மணலுடன் சேர்த்து அமைக்கப்படும். இதனால் உப்புநீர் கொள்ளிடம் ஆற்றில் புகுவது தற்காலிகமாக தடுக்கப்படும். நிரந்தரமாக தடுப்பணை கட்டும் வரை தற்போது அமைக்கப்பட உள்ள தற்காலிக தடுப்பணை இருக்கும் என்றார். அப்போது அவருடன் அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஞானசேகரன், சிவகுருநாதன், கணபதி, அன்புச்செல்வன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நற்குணன், ராஜேந்திரன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story