மன்னார்குடி அரித்திராநதி சீனிவாசபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மன்னார்குடி அரித்திராநதி சீனிவாசபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-08T02:10:20+05:30)

மன்னார்குடி அரித்திராநதி சீனிவாசபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மன்னார்குடி,

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் அரித்திராநதி தெப்பகுளம் உள்ளது. இந்த குளத்தின் தென்கரையில் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவோணம் நட்சத்திர நாளிலும், மேல்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மூலம் நட்சத்திர நாளிலும், வடகரையில் உள்ள ராமர் கோவிலில் புனர்பூசம் நட்சத்திர நாளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குளத்தின் மைய பகுதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. திருவோணம் நட்சத்திரத்தையொட்டி நேற்றுமுன்தினம் சீனிவாசபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story