திருப்பூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-08T02:56:37+05:30)

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம்,

திருப்பூர்,

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம், வாங்கிய கடனை கட்ட சொல்லி வங்கி நிர்வாகம் அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து தற்கொலை செய்து வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் தற்கொலையை உடனடியாக தடுக்கும் நடவடிக்கையை எடுக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடும், விவசாய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயல் தலைவர் வெற்றி, பொருளாளர் தங்கராஜ், துணைத்தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story