புதுச்சேரியில் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்


புதுச்சேரியில் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:30 PM GMT (Updated: 7 Jan 2017 10:00 PM GMT)

புதுச்சேரியில் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த பிரச்சினை

புதுச்சேரி,

புதுச்சேரியில் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை பிருந்தாவனம் காமராஜர் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி விவசாய அபிவிருத்தி கிளை முன்பு நேற்று மாலை முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகிறார்கள். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளிகள், வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரதமரிடம் வலியுறுத்தல்

மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி பிரதமரின் திட்டம் தோல்வி அடைத்துவிட்டதால், அவர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சியினர் அனைவரும் ரூபாய் நோட்டு தடையை திரும்ப பெற வேண்டும் என ஜனாபதியிடம் கூறிஉள்ளனர்.

நாட்டில் 2 சதவீதம் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை நடைபெறுகிறது. மீதம் 98 சதவீதம் பண பரிவர்த்தனை தான் நடைமுறையில் இருந்து வருகிறது. பிரதமரிடம் நான், புதுவையில் மக்கள் ஏற்கும் வரை, பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை அமல்படுத்த முடியாது. எனவே பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

புதுச்சேரியில் 150 கோடியாக இருந்த வருவாய், தற்போது ரூ.120 கோடியாக குறைந்துவிட்டது. புதுச்சேரி யூனியன் பிரதசேமாக இருந்தாலும் சட்டப்பேரவை உள்ளது. எனவே எந்த திட்டமாக இருந்தாலும் அதனை எங்கள் மீது திணிக்க கூடாது என கூறி உள்ளேன்.

இலவச அரிசி

புதுச்சேரிக்கு இந்த ஆண்டிற்கு ரூ.500 கோடி நிதி கூடுதலாக பெற்று வருவேன். இடைத்தேர்தல் காரணமாக இலவச அரிசி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. இம்மாதம் இறுதிக்குள் 20 கிலோ இலவச அரிசி மீண்டும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பாரத ஸ்டேட் வங்கி அருகே மூடப்பட்டிருந்த ஏ.டி.எம். மையத்துக்கு மலர் வளையம் வைக்கப்பட்டது.


Next Story