திருப்பரங்குன்றம் கோவிலில் விசே‌ஷம் ஒரே நாளில் வைகுண்ட ஏகாதசி, மாத கார்த்திகை கொண்டாட்டம் பவளக்கனிவாய் பெருமாள், முருகப்பெருமான் நகர் உலா


திருப்பரங்குன்றம் கோவிலில் விசே‌ஷம் ஒரே நாளில் வைகுண்ட ஏகாதசி, மாத கார்த்திகை கொண்டாட்டம் பவளக்கனிவாய் பெருமாள், முருகப்பெருமான் நகர் உலா
x
தினத்தந்தி 8 Jan 2017 6:26 PM GMT (Updated: 2017-01-08T23:56:04+05:30)

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று ஒரே நாளில் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, முருகப்பெருமானுக்கு உகந்த மார்கழி மாத கார்த்திகை ஆகிய 2 விசே‌ஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கருவறையில் உள்ள பவளக்கனிவாய் பெருமா

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று ஒரே நாளில் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, முருகப்பெருமானுக்கு உகந்த மார்கழி மாத கார்த்திகை ஆகிய 2 விசே‌ஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கருவறையில் உள்ள பவளக்கனிவாய் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோவில் மடப்பள்ளி அருகே உள்ள சொக்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மாதந்தோறும் வரும் கார்த்திகை தினத்தன்று முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நகர் உலா வருவது வழக்கம்.

அதேபோல முருகப்பெருமானுக்கு உகந்த மார்கழி மாத கார்த்திகை தினமான நேற்று வழக்கம் போல இரவு 7 மணிக்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி நகர் வீதிகளில் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். இவ்வாறு நேற்று ஒரே நாளில் பவளக்கனிவாய் பெருமாள், முருகப்பெருமான் ஆகியோர் அடுத்தடுத்து எழுந்தருளியது பக்தர்கள் மத்தியில் சிறப்பாக கருதப்படுகிறது.


Next Story