ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:00 PM GMT (Updated: 2017-01-09T00:10:08+05:30)

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரியும், ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பிக்கக்கோரியும் நாம் தமிழ் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பா

ஈரோடு,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரியும், ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பிக்கக்கோரியும் நாம் தமிழ் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஈரோடு மாநகர செயலாளர் மாதையன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஒட்டக்கூத்தன் என்கிற அலாவுதீன், நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.


Next Story