சேலத்தில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து முதியவரை பிடித்த பொதுமக்களால் பரபரப்பு


சேலத்தில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து முதியவரை பிடித்த பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-09T00:17:34+05:30)

சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியில் நேற்று மதியம் சுமார் 65 வயதுடைய ஒரு முதியவர் அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், குழந்தை கடத்த வந்ததாக நினைத்து அவரை பிடித்து விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்

சேலம்,

சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியில் நேற்று மதியம் சுமார் 65 வயதுடைய ஒரு முதியவர் அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், குழந்தை கடத்த வந்ததாக நினைத்து அவரை பிடித்து விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர்.


Next Story