சின்னாளபட்டி அருகே குடும்ப பிரச்சினையில் மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவர் கைது


சின்னாளபட்டி அருகே குடும்ப பிரச்சினையில் மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-09T00:27:46+05:30)

சின்னாளபட்டி அருகே, குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– காதல் திருமணம் திண்டுக்கல் மாவட்டம் சின்ன

சின்னாளபட்டி,

சின்னாளபட்டி அருகே, குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

காதல் திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி சவரியார் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 55).கூலித்தொழிலாளி. இவருடைய மகள் செலின்சாந்தி. இவர் கொடைக்கானலை அடுத்த பெரும்பாறை அருகே உள்ள உப்புப்பாறை பகுதியை சேர்ந்த டிரைவரான செல்லப்பாண்டி என்பவரை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கர்ப்பிணியான செலின்சாந்தி பிரசவத்திற்காக தந்தை வீட்டிற்கு சென்றார்.

இதற்கிடையே செல்லப்பாண்டிக்கு திண்டுக்கல்–மதுரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவர் வேலை கிடைத்தது. இதனால் அவரும் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்றுவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செலின்சாந்திக்கு குழந்தை பிறந்தது.

சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்லப்பாண்டிக்கும், செலின்சாந்திக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு நடந்தது. மனைவியை அவர் அடித்ததாக கூறப்படுகிறது. தனது கண் எதிரிலேயே செலின்சாந்தியை மருமகன் அடிப்பதை பார்த்த அருளப்பன் ஓடிச்சென்று அவரை தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டு கீழே விழுந்தனர். இதில் செல்லப்பாண்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து, மாமனாரின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அருளப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சின்னாளபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் வழக்குப்பதிவு செய்து, செல்லப்பாண்டியை கைது செய்தார். மாமனாரை, மருமகனே ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story