நடிகர் சத்யராஜின் சகோதரி பங்களாவில் திருட முயற்சி போலீஸ் விசாரணை


நடிகர் சத்யராஜின் சகோதரி பங்களாவில் திருட முயற்சி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2017 10:00 PM GMT (Updated: 8 Jan 2017 7:08 PM GMT)

குன்னூர் அருகே உள்ள நடிகர் சத்யராஜின் சகோதரிக்கு சொந்தமான பங்களாவில் திருட முயற்சி நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் சத்யராஜின் சகோதரி குன்னூர் அருகே பெள்ளட்டி மட்டம் பகுதியில் நடிகர் சத்யராஜின் சகோதரியான கல்பனா மன்றாடி

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள நடிகர் சத்யராஜின் சகோதரிக்கு சொந்தமான பங்களாவில் திருட முயற்சி நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் சத்யராஜின் சகோதரி

குன்னூர் அருகே பெள்ளட்டி மட்டம் பகுதியில் நடிகர் சத்யராஜின் சகோதரியான கல்பனா மன்றாடியாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. கல்பனா மன்றாடியாகர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் குன்னூர் திரும்பினார். அப்போது பங்களாவின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதையும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸ் விசாரணை

தொடர்ந்து வீட்டுக்குள் பொருட்கள் ஏதாவது திருடு போய் உள்ளதா? என்று பார்த்தார். ஆனால் எதுவும் திருடப்படவில்லை. மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். இது குறித்து கல்பனா மன்றாடியார் வெலிங்டன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியாருக்கு சொந்தமான பங்களாவின் பின்புற ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி விட்டு, திருட முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் எந்த பொருளையும் திருடாமல் சென்று விட்டனர்.

இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதி பொதுமக்களிடம் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது என்று கூறினார்கள்.

சூப்பிரண்டு ஆய்வு

கடந்த சில நாட்களாக வெலிங்டன் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பெள்ளட்டி மட்டத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


Next Story