பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-09T01:29:39+05:30)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

விலையில்லா வேட்டி-சேலை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு விலையில்லா வேட்டி- சேலை வழங்கும் திட்ட தொடக்க விழா நேற்று ஆண்டாங்கோவில்புதூர் ரேஷன் கடையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கீதா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி-சேலையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை ஏழை, எளியவர்கள் புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 583 ரேஷன் கடைகள் மூலம் 2,49,414 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

மருத்துவ முகாம்

முன்னதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கரூர் தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதை அமைச்சர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி சூரியபிரகாஷ், கரூர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன், துணை செயலாளர் சிவசாமி, நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், தென்னக ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் திருவிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story