கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு உளுந்து மூட்டைகள் விற்பனை


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு உளுந்து மூட்டைகள் விற்பனை
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-06T20:05:06+05:30)

கள்ளக்குறிச்சி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு உளுந்து மூட்டைகள் விற்பனையானது.

கள்ளக்குச்சி,

600 உளுந்து மூட்டைகள்

கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட உளுந்து, மணிலா, எள், கம்பு, மக்காச்சோளம், பச்சை பயறு உள்ளிட்ட தானியவகை பயிர்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.. அந்த வகையில் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேற்று 302 விவசாயிகள் மொத்தம் 600 உளுந்து மூட்டைகள் கொண்டு வந்தனர். அதனை தஞ்சாவூர், சின்னசேலம், திருக்கோவிலூர் சேலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உளுந்து அதிபட்சமாக ரூ.7,196–க்கும், குறைந்த பட்சமாக ரூ.6,870–க்கும் விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ. 40 லட்சத்துக்கு உளுந்து மூட்டைகள் விற்பனையானது.

இதேபோல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்த மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட தானிய மூட்டைகளையும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் உளுந்து மூட்டைகள் அதிகமாக விற்பனைக்கு வந்தது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில் தெரிவித்துள்ளார்.


Next Story