உலக புற்றுநோய் தினத்தையொட்டி கருத்தரங்கம்-பட்டிமன்றம்


உலக புற்றுநோய் தினத்தையொட்டி கருத்தரங்கம்-பட்டிமன்றம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-07T01:49:59+05:30)

உலக புற்றுநோய் தினத்தையொட்டி கருத்தரங்கம்-பட்டிமன்றம்

திருச்சி,

உலக புற்றுநோய் தினத்தையொட்டி திருச்சி உறையூரில் உள்ள ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் திருச்சி ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. கவிஞர் நந்தலாலா தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தை ஆக்ஸ்போர்டு கல்லூரி தலைவர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாநில அளவில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மேரிலில்லி தலைமையில் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தாமரை, இந்திரா செவிலியர் கல்லூரி முதல்வர் ஷெரின் ஜி.எட்வின், ஜெயராம் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கண்ணன், திருச்சி ரோட்டரி கிளப் தலைவர் ஜே.நரேந்திர குமார், ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.என்.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கோவிந்தராஜ், டாக்டர் சசிப்பிரியா கோவிந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story