நாராயணசாமி நிழல்தாங்கல் திருப்பதம் சாற்று திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


நாராயணசாமி நிழல்தாங்கல் திருப்பதம் சாற்று திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-07T01:52:18+05:30)

அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஈச்சன்விளை நாராயணசாமி நிழல்தாங்கலில் திருப்பதம் சாற்று திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்தாமரைகுளம்,

திருப்பதம் சாற்று திருவிழா

ஈச்சன்விளை நாராயணசாமி நிழல்தாங்கலில் புனரமைப்பு திருப்பணி முடிந்து, திருப்பதம் சாற்று திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறப்பு, தொடர்ந்து அய்யா வைகுண்ட சாமியின் தலைமைப்பதியான சுவாமிதோப்பு பதியில் இருந்து முத்திரிப்பதம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நிழல் தாங்கல் பணிவிடையாளர் லிங்கபூபதி தலைமை தாங்கினார். காலை 8 மணிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. பின்னர் அய்யா கோபுரம் மற்றும் சீவாயிமார் கோபுரத்தில் திருநாம திருப்பதம் சாற்றுதல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் மணிவண்ணன், செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாமிதோப்பு தலைமைப்பதி தர்மகர்த்தா கோபுர வேந்தன் பையன்ராஜா கோபுர கலசங்களுக்கு திருப்பதம் சாற்றினார்.

பாராட்டு விழா

நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மதியம் 1 மணிக்கு சமபந்தி தர்மம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யாவழி சிறப்பு சொற்பொழிவு மற்றும் நிழல் தாங்கல் புனரமைப்பு திருப்பணியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர் பெரியவன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன், சந்தையடி ஊர் செயலாளர் சங்கரவதனன், தங்கதுரை உள்பட பலர் பேசினர். பின்னர் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பொன்னாடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. முடிவில் கொழுந்து வேலகுமரன் நன்றி கூறினார். இரவு அய்யாவுக்கு பணிவிடையும், அன்னதர்மமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் திவாகர், சென்னை ஹோம் அப்ளையன்ஸ் உரிமையாளர் மனோகரன், ஆசிரியர் நாகராஜன், ஸ்ரீராமன், துரை, ராமச்சந்திரன், கோபுர சிற்பி பிச்சைகாலன், கொட்டாரம் பிரஜேஷ் டிரேடர்ஸ் உரிமையாளர் வேல்முருகன், லட்சுமணப்பெருமாள், செல்வகுமார், ராதாகிருஷ்ணன், பொன்ராஜ் மற்றும் சந்தியா டெக்ஸ் உரிமையாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story