இனயம் வர்த்தக துறைமுகத்தை கைவிடக்கோரி மீனவர் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இனயம் வர்த்தக துறைமுகத்தை கைவிடக்கோரி மீனவர் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-07T01:52:52+05:30)

இனயம் வர்த்தக துறைமுகத்தை கைவிடக்கோரி மீனவர் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குளச்சல்,

இனயம் வர்த்தக துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி குமரி மாவட்ட மீனவர் மக்கள் சங்கம் சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் ஆண்ட்ரோஸ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜான் பிரேமஸ், பொருளாளர் குருசையா, சைமன் காலனி ஊராட்சி முன்னாள் தலைவர் அந்தோணி பிச்சை, முன்னாள் கவுன்சிலர் சூசை மரியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இனயம் துறைமுக எதிர்ப்பு இயக்க தலைவர் ஜோர்தான், சட்ட ஆலோசகர் பென்சாம், ஒருங்கிணைப்பாளர் தியோடர் சேம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

Next Story