சிவன்மலையில் புதிய பல்லக்கு வெள்ளோட்டம்

சிவன்மலை கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி நேற்று சுப்பிரமணியசாமி சிவன்மலையில் புதிய மைசூர் பல்லக்கு வெள்ளோட்டம் நடந்தது.
தைப்பூச தேர்த்திருவிழா
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந்தேதி காலை மலையடிவாரத்தில் இருந்து வீரகாளியம்மன் மலைகோவிலுக்கு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அங்கு விநாயகர் வழிபாடும், கொடியேற்றமும் நடந்தது.
இதன் பின்னர் சுப்பிரமணியசாமி மலையடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. தேரோட்டத்திற்கு முதல் நாளான வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி சிவன்மலையை வலம் வருவார்.
ரூ.3½ லட்சத்தில் புதிய பல்லக்கு
கோவிலில் ஏற்கனவே இருந்த மைசூர் பல்லக்கிற்கு பதிலாக சன்னை மிராசுதாரர்கள் சார்பில் ரூ.3½ லட்சம் செலவில் புதிதாக செய்யப்பட்ட மைசூர் பல்லக்கு வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
பல்லக்கில் கலசம் வைக்கப்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி வரப்பட்டது. இதில் சன்னை மிராசுதாரர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story