மும்பையை பா.ஜனதாவிடம் ஒப்படைத்து விட்டு சிவசேனா பாத்திரம் துலக்க போக வேண்டுமா? உத்தவ் தாக்கரே ஆவேசம்

மும்பையை பா.ஜனதாவிடம் ஒப்படைத்து விட்டு, சிவசேனா பாத்திரம் துலக்க போக வேண்டுமா?’’ என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மும்பை,
‘‘மும்பையை பா.ஜனதாவிடம் ஒப்படைத்துவிட்டு, சிவசேனா பாத்திரம் துலக்க போக வேண்டுமா?’’ என்று தேர்தல் பிரசாரத்தில் உத்தவ் தாக்கரே ஆவேசமாக தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேமும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சாந்திவிலியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:–
சிவாஜி பார்க் பகுதியில் அம்பேத்கர் நினைவு மண்டபம் அமைக்க கடந்த ஆண்டில் பூமி பூஜை செய்யப்பட்டது. ஆனாலும், அங்கு ஆக்கப்பூர்வமாக எந்த பணியும் இதுவரை நடைபெறவில்லை. மும்பை மக்கள் ரூ.2 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரி செலுத்தி இருக்கின்றனர். இதில், 25 சதவீத நிதியை மும்பையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு செலவிட வேண்டும்.
மோடிக்கு அழைப்புமும்பையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வரவேண்டும். அப்போது தான் சிவசேனாவின் வெற்றி பிரகாசமாக பேசப்படும். மும்பையையும் பாரதீய ஜனதாவிடம் ஒப்படைத்துவிட்டு சிவசேனா பாத்திரம் துலக்க போக வேண்டுமா?.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.