தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் கனிமொழி எம்.பி. பேச்சு


தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்         கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2017 10:57 PM GMT (Updated: 2017-02-07T04:27:05+05:30)

தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் என கனிமொழி எம்.பி. பேசினார்.

சங்கரன்கோவில்,

தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் என கனிமொழி எம்.பி. பேசினார்.

திருமண விழா

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் உதவியாளர் இல்லத் திருமண விழா சங்கரன்கோவிலில் நேற்று நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:–

தமிழ்நாட்டை பொருத்தவரை நாம் வசிக்கின்ற சமூகத்தை சுற்றி பூதாகரமாக கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட பல கேள்விக்குறிகள், பல கேள்விக்கனைகளை விண்ணளவு எழுந்து நிற்கக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும். தமிழகம் எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பல கேள்விகள் நம் முன்னால் எழுந்து நிற்கிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் உண்மையான, சரியான, தெளிவான பதில் திராவிட முன்னேற்ற கழகம் என்பதை நாமும், மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக உங்கள் உறுதுணையுடன், உங்கள் உழைப்போடு, சிறந்த செயல்பாட்டோடு கட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைவர் கருணாநிதி வழிகாட்டுதலில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த நாள் வெகு விரைவில் வரும்.

மக்கள் தயாராகி விட்டார்கள்

இன்னொரு கட்சியில் நடைபெறக்கூடிய மாற்றங்களை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் நிச்சயமாக இந்த மாற்றங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஆனால் தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.


Next Story